Monday, 10 June 2013

திருமணம் செய்ய மறுத்த லாரி டிரைவரை, வெட்டி கொலை செய்த கள்ளக்காதலி,



திருவண்ணாமலை: திருமணம் செய்ய முயன்ற லாரி டிரைவரை, வெட்டி கொலை செய்த கள்ளக்காதலி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த, லாரி டிரைவர் பாண்டியன், 29. இவரது பக்கத்து வீட்டில், சென்னையில் தனியார் பஸ் டிரைவாக இருக்கும், ரகுபதி வசித்து வருகிறார். இவரது மனைவி, சித்ரா, 40. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பாண்டியனுக்கும், சித்ராவுக்கும், 10 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்தது. இந்நிலையில், பாண்டியனுக்கு அவரது தாய், திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, பெண் பார்த்து வந்தார். இதை அறிந்த சித்ரா, பாண்டியனிடம் கேட்டதற்கு, வேறு பெண்ணை திருமணம் செய்ய தயாராகி வருவதாக கூறினார். இதனால், தகராறு செய்த சித்ராவை, பாண்டியன் சமாதானம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பாண்டியனின் மொபைல்போனில் தொடர்பு கொண்ட சித்ரா, உடனே தன் வீட்டுக்கு வரும்படி கூறினார். அவர் வந்தவுடன் இருவரும், மாடியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பாண்டியனிடம், "வேறு பெண்ணை திருமணம் செய்ய கூடாது' என, சித்ரா கூறினார். இதனால், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சித்ரா, அரிவாளால் பாண்டியனை சரமாரியாக வெட்டினார். முகம், கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி, பாண்டியன் இறந்தார். சத்தம் கேட்டு, பாண்டியனின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். கிராம மக்கள் திரண்டு வந்ததால், மாடியில் இருந்து வீட்டுக்குள் சென்ற சித்ரா, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிரம்மதேசம் போலீசார், இருவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment