Wednesday, 5 June 2013

திருத்துறைப்பூண்டி அருகே 2 பேர் கருகி பலி


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடி கிராமத்தில், நேற்று பகல், 1:30 மணிக்கு, ஒரு கூரை வீட்டில், தீப்பற்றியது. காற்று வீசியதால், தீ, மளமளவென பரவியதில், 4 கடைகள், 13 வீடுகள், முழுவதுமாக எரிந்து சாம்பலாயின. இதில், வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட ராசம்பாள், 65, இவரைக் காப்பாற்ற சென்ற, முத்துமாணிக்கம்,35, ஆகிய இருவரும் உடல் கருகி இறந்தார். விபத்தால், கிழக்கு கடற்கரை சாலையில், நான்கு மணி நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment