மயிலாடுதுறை: ஆத்திரத்தில், கணவரின் இரண்டாம் மனைவியை, வெட்டிக் கொன்ற பெண், கைது செய்யப்பட்டார். சீர்காழியை அடுத்த அள்ளி விளாகத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, 45; வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி வேதவள்ளி. திருமணமாகி, 15 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதையடுத்து, மூன்று ஆண்டுக்கு முன், முதல் மனைவி ஒப்புதலுடன், சிவசங்கரி, 28, என்பவரை இரண்டாவதாக, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, வேதவள்ளிக்கும், சிவசங்கரிக்குமிடையே தகராறு நடந்து வருகிறது. சமீபத்தில், வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த துரைசாமி, இருவரையும் சமாதானப்படுத்தினார்.
நேற்று முன்தினம் வேதவள்ளிக்கும், சிவசங்கரிக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவசங்கரி, வேதவள்ளியை அடித்துள்ளார். ஆத்திரமடைந்த வேதவள்ளி, இரவு வீட்டினுள் படுத்து தூங்கிய சிவசங்கரியை, அரிவாளால் வெட்டிக் கொன்றார். துரைசாமி புகாரை அடுத்து, பாகசாலை போலீசார், வேதவள்ளியை கைது செய்தனர்.
No comments:
Post a Comment