பெரம்பலூர் அருகே காதல் திருமணம் செய்த இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை செய்த, பெண்ணின் அப்பா மற்றும் அண்ணனை மருவத்தூர் போலீஸார் இன்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
பெரம்பலூர் 1-வது வார்டு ஆலம்பாடி சாலை புதுக்காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பார்த்தீபன் (25). இவர் செட்டிக்குளம் கிராமத்தில் ஐஸ் கிரீம் பேக்டரி வைத்திருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பழனி மகள் ஒச்சம்மாள் (20). அருந்ததியர் இனத்தை சேர்ந்த பார்த்தீபனும், தேவர் இனத்தை சேர்ந்த ஒச்சம்மாளும் காதலித்து கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு ஒச்சம்மாளின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனராம். இதனால் ஒச்சம்மாள் குடும்பத்தினருக்கும், பார்த்தீபனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த அழகிரிக்கு சொந்தமான வயலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பார்த்தீபன் இறந்து கிடந்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது. தவலறிந்த மருவத்தூர் போலீஸார் பார்த்தீபனின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில் ஒச்சம்மாளின் தந்தை பழனி, அண்ணன் செல்வராஜ் உள்பளிட்ட சிலர் பார்த்தீபனை புதன்கிழமை இரவு கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பெரம்பலூர் துணை கண்காணிப்பாளர் ஆர். சுஹாசினி, பழனி (48) மற்றும் செல்வராஜ் (26) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
No comments:
Post a Comment