ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபெற உள்ள, "உலக அழகி போட்டி' யில் நீச்சல் உடை இடம் பெறாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். வரும் செப்டம்பர் மாதம், இங்குள்ள பாலித்தீவில், உலக அழகி போட்டி நடக்க உள்ளது. 137 பேர் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.கடந்த ஆண்டு, பாப் இசை பாடகி, காகாவின் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. "அரை குறை ஆடையுடன் நடனமாடும் காகாவின் இசை நிகழ்ச்சி நடந்தால், அந்த மேடையை தீயிட்டு கொளுத்துவோம்' என, முஸ்லிம்கள் எச்சரித்ததால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
உலக அழகி நடக்கும் போதெல்லாம், அதில் ஒரு பிரிவான, நீச்சல் உடைக்கான போட்டியும் நடக்கும். ""முஸ்லிம்களின் எதிர்ப்பு அதிகம் உள்ளதால், இந்த முறை நீச்சல் உடை பிரிவுக்கான நிகழ்ச்சி நடக்காது,'' என, உலக அழகி போட்டியின் ஏற்பாட்டாளர் ஜூலியா மோர்லி, லண்டனில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ""இந்த போட்டியினால் யாரையும் இழிவுப்படுத்த போவதில்லை. யாருடைய மனதையும் நோகச்செய்யபோவதில்லை,'' என்றார்.
No comments:
Post a Comment