கடலாடி அருகே முஸ்லீம் பெண் போல பர்தா ஆடை அணிந்து வந்து, பெண்ணிடம் இன்று(சனிக்கிழமை) அதிகாலை நகை அபகரித்து சென்ற இளைஞைரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இளஞ்செம்பூர் காவல் நிலைய சரகம் பெரிய பொதிகுளத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி பெயர் ஜெயலட்சுமி(29). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை உள்ளன. வடிவேல் தற்போது கோவையில் தங்கி நூற்பு மில் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஊரில் தனது பாட்டி சொர்ணம் என்பவர் பாதுகாப்பில் பிள்ளைகளுடன் ஜெய லட்சுமி வசித்து வருகிறார். அதிகாலை வீட்டுக் கொல்லைப் புறம் கதவைத் திறந்து, வெளியே ஜெயலட்சுமி வந்தபோது, முஸ்லீம் பெண் போல பர்தா ஆடையை அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் நின்றிருந்தார்.
பெண் என்று எண்ணி அருகில் ஜெயலட்சுமி சென்றபோது திடீரென்று, ஜெயலட்சுமி மீது அந்த மர்ம நபர் பாய்ந்து கழுத்தில் கிடந்த நாலரை பவுன் தங்க சங்கிலியை பறித்தாராம். ஆனால் மர்ம நபரை ஜெயலட்சுமி கட்டிப் பிடித்தவாறு வீட்டிற்குள் இழுத்துச் சென்று, பர்தா ஆடையைக் கிழித்து எறிந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது பர்தா ஆடைக்குள் ஒளிந்திருந்த மர்ம நபர், அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பழனிச்சாமி(எ)கண்ணன்(28) என்று அடையாளம் தெரிந்ததாம். ஜெயலட்சுமி கூச்சல் போட்டு அருகில் இருந்தவர்களை அழைப்பதற்குள், சங்கிலியை அபகரித்துக் கொண்டு, ஜெயலட்சுமியைக் கீழே தள்ளி விட்டு, இருட்டில் பழனிச்சாமி பாய்ந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டாராம்.
சம்பவம் குறித்து இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புதார் செய்தார். உதவி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், காவல் ஆய்வாளர் (பொறுப்பு) குமரன், சார்பு ஆய்வாளர் அருள் பிரகாஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, சமபவ இடத்திற்கு போலீஸாருடன் சென்று விசாரணை நடத்தினர். நகையுடன் தலைமறைவான இளைஞர் பழனிச்சாமியை போலீஸார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment