Thursday, 6 June 2013

"வாஷிங் மெஷினில்' குழந்தை கொலை கொன்ற தாயும் தற்கொலை



புதுடில்லி: டில்லியில், குழந்தையை, "வாஷிங் மெஷினில்' போட்டு கொன்ற தாய், இன்னொரு குழந்தையை, தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார்.உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரை சேர்ந்தவர், தேவேந்திர யாதவ். இவர் தன் மனைவி, சவிதா, 30. இவர்கள், டில்லியில் வசித்து வந்தனர். சில தினங்களாக, இவர்களுக்குள், கருத்து வேறுபாடு இருந்ததாம். ஆத்திரமடைந்த சவிதா, இரு தினங்களாக சமைக்க மறுத்துவிட்டதால், மனைவியை யாதவ், கடுமையாக திட்டியுள்ளார்.இதனால் மனமுடைந்த சவிதா, தன், 6 வயது பெண் குழந்தையை, நீர் நிரப்பிய வாஷிங் மிஷினில், மூழ்கடித்தும், 11 மாத ஆண் குழந்தையை, தண்ணீர் வாளியில் மூழ்கடித்தும் கொலை செய்தார். பின், தானும் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.மதிய உணவு இடைவேளையில், யாதவ், சவிதாவை போனில் தொடர்பு கொண்ட போது, தொடர்பு கிடைக்கவில்லை. உடனடியாக அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய யாதவ், சவிதா தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இரு குழந்தைகளும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடப்பதைக் கண்டு சோகத்தில் மூழ்கினார். மூவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment