Thursday, 6 June 2013

3 காதல்... 3 கணவர்கள்... இப்ப 3வது குழந்தை: இது டைட்டானிக் நாயகியின் அதிரடி!




லண்டன்: கேட் வின்ஸ்லெட் என்று சொன்னால் தெரியாதவர்களுக்குக் கூட 'டைட்டானிக் நாயகி ரோஸ்' என்றால் சட்டென்று அடையாளம் தெரிந்து விடும். அந்தளவுக்கு டைட்டானிக்கில் காவியக்தாதல் புரிந்தவர். படத்தில் காவியக்காதல் புரிந்த கேட், ரியல் லைப்பிலும் ரொமான்ஸ் நாயகி தான். ஏற்கனவே, இரு குழந்தைகள் பெற்றெடுத்த கேட், தற்போதைய கணவ‌ரின் மூலம் இந்த வருட இறுதியில் மீண்டும் கருத்த‌ரிக்கப் போகிறாராம். நம்மூரில் நேரம், நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்றால், ஹாலிவுட்டில் ரொம்ப.... அட்வான்ஸாக மாதம் தேதியெல்லாம் சொல்லி குழந்தை பெற்றுக் கொள்வது சகஜம்.காதல் ராணி... வின்ஸ்லெட்டுக்கு நிஜ வாழ்க்கையில் பல காதல்கள் பூத்தன. ஆனால், திருமணத்தில் முடிந்தது என்னவோ, முத்துக்கு முத்தாக மூன்றே மூன்று காதல் தான்பெண் மியா... முதல் கணவரான வின்ஸ்லெட்டுக்கு மூலம் பிறந்த குழந்தைக்கு தற்போது 11 வயதாகிறது. பெண் குழந்தையான அவர் பெயர் மியா.இரண்டாவது கணவர் புகழ்பெற்ற இயக்குனர் சாம் மென்டஸ். இவரோடு வாழ்ந்த காலத்தில் பிறந்த பையனான ஜோவுக்கு தற்போது வயது எட்டுகேட்டின் தற்போதைய கணவர் நெட் ராக்ன்ரோல். இருவரும் சேர்ந்து தான், இந்த வருட இறுதியில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என தீர்மானித்திருக்கிறார்களாம்கேட்டுக்கு பிறக்கப் போகும் குழந்தையும் மூணாவது, கணவரும் மூணாவது என்பது குறிப்பிடத்தக்கது.முதல் இரண்டு திருமணங்களையுமே தலா ஒரு குழந்தையோடு முறித்துக் கொண்ட கேட். அடுத்த குழந்தைக்கு திட்டமிட்டிருக்கிறாரா இல்லை, விவாகரத்துக்கு திட்டமிட்டு இருக்கிறாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.






No comments:

Post a Comment