லண்டன் : தவறான பாலியல் உறவு முறைகளை விலாவாரியாக விவரித்து, அதில் எது குற்றமாகும் என்று பல்கலைக்கழக தேர்வில் மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை குற்றவியல் சட்ட மாணவர்களுக்கான தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 23 கல்லூரிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் வாய்வழி உறவு, ஆண் பலாத்காரம், நிர்வாணச் சித்ரவதை உள்ளிட்டவை தொடர்பாக குறிப்பிட்டு எதில் தவறு என்று கேட்கப்பட்ட கேள்வி தேர்வு எழுதிய மாணவர்களை பெரிதும் அதிர்ச்சி அடையச் செய்தது.
பல்கலைக்கழகங்களில் மது அருந்தும் பழக்கம் கொண்ட மாணவர் கிளப்புகள் உள்ளன. இதில் புதியவர்களை சேர்க்கும்போது நம்மூர்களில் நடக்கும் ராக்கிங்கை போன்று ராக்கிங் நடப்பது வழக்கம். இதன் அடிப்டையில் கேள்வி எண் 9ல் கூறப்பட்டிருந்தாவது: மது குடிப்பவர்கள் சங்கமான விஜார்ட்சின் தலைவர் சாண்ட்ரா. இவர் புதிய உறுப்பினர்களை கிளப்பில் சேர்க்கும் அறிமுக நிகழ்ச்சியை நடத்துகிறார். பெரும்பாலானவர்கள் இந்த நிகழ்ச்சியில் மூக்குமுட்ட மது குடிக்கின்றனர். இந்த கிளப்பைச் சேர்ந்த பில்லி, கில்பர்ட், ரிச்சர்ட் ஆகியோர் வட்டமாக நின்று கொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து இவர்கள் புதிய உறுப்பினர்களிடம் வாய்வழி உறவு வைத்து கொள்கின்றனர். மாணவர் ஒருவரிடம் தகாத உறவு வைத்து கொள்கின்றனர். மற்றொரு மாணவரின் அந்தரங்க உறுப்பில் ரோமத்தை பிடுங்கி எறிகின்றனர். இதில் அவர் இறக்கிறார். இந்த சம்பவத்தில் எது குற்றமாகும்? இப்படி அந்த கேள்வியில் கேட்கப்பட்டிருந்தது.
தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்ததுதான் மிச்சம். தேர்வு முடிந்த சில மணி நேரங்களில் மாணவ, மாணவியர் தங்கடைய சமூக இணையதளத்தில் பல்கலைக்கழகத்தின் இந்த பொறுப்பற்ற கேள்வி குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment