Saturday, 27 April 2013

ரஷ்யாவில் முஸ்லிம்கள் 140 பேர் கைது


மாஸ்கோ ; ஏப்ரல் 27 ;  

அமெரிக்காவின் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் நடைபெற்ற வெடிவிபத்தில் ஈடுபட்ட இருவரும், ரஷ்யாவின் செச்ன்யாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும், அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரித்தனர் என்றும் செய்திகள் வெளியான.

இந்தநிலையில் நேற்று ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த இஸ்லாமியர்களில் 140 பேரை தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கருதி ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும், கைது செய்துள்ளனர்.

இவர்களில் 30 பேர், தங்கள் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் இங்கு வந்துள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாஸ்டன் சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாஸ்டன் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கருதப்படும் சகோதரர்களின் தாயார் சுபைதா, அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளால், 18 மாதங்களுக்கு முன்னால் குறிக்கப்பட்ட தீவிரவாதிகளின் வரிசையில் இடம்பெற்றிருந்ததாகவும் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவருவதால் தகவல்கள் வெளியிடப்படக்கூடாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயினும், அவர்களுடைய தாயார் இதனை மறுத்துள்ளார்.  ரஷ்யக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட மாவட்ட அலுவலகத்தில் இருந்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கு முன்னால் , தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள், இந்த மசூதிக்கு வந்துசென்றுள்ளனர் என்ற தகவல்கள் மட்டும் கிடைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment