Friday, 26 April 2013

கணவனை கழுத்தை அறுத்து கொன்ற மனைவி


ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2-ம் தேதி 45 வயது மதிக்கதக்க ஆண் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் வளசரவாக்கம் திருவள்ளூவர் நகரை சேர்ந்த மோகன் என்பதும் அவரை மனைவி அம்சாவே கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. அம்சாவை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்து வாக்கு மூலத்தில்:-
நாங்கள் இருவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த கீரை வியாபாரம் செய்து வந்தோம்.கிடைக்கும் வருமானத்தை கணவர் மோகன் குடித்தே செலவழித்தார். மேலும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பும் இருந்தது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. சம்பவத்தன்று இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு உருவானது. அப்போது என்னை மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார்.
இதனால் மனமுடைந்து கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். கடந்த மாதம் 1-ம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லலாம் என கணவரை அழைத்துச் சென்று பஸ் நிலையம் பின்புறம் உள்ள மறைவான இடத்தில் அமர்ந்து, அவர் வாங்கி வைத்திருந்த மதுவை ஊற்றிக் அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். மதுவை அருந்திய சிறிது நேரத்தில் அவர் மயங்கினார். கீரை கட்டை அறுக்கும் சிறிய கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்றேன். பின்னர் வீட்டிற்கு வந்து விட்டேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர் என அவர் கூறினார்.

No comments:

Post a Comment