Tuesday, 30 April 2013

தண்ணீர் பந்தல் வைப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் ஒருவர் கைது


பண வசூலில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் சிக்கினார். மற்ற 4 பேரை தேடுகின்றனர். ஆலந்தூர் மாரீசன் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ரமணி (52).  கட்டிட கான்டிராக்டர். இவர், தனது வீட்டிலேயே அலுவலகம் வைத்துள்ளார். நேற்று காலை இவரது அலுவலகத்துக்கு 5 பேர் வந்தனர். கோடை காலத்துக்கு தண்ணீர் பந்தல் அமைக்க நன்கொடை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் வரவே, அருகிலுள்ள ரோந்து போலீசாருக்கு வெங்கட் ரமணி தகவல் கொடுத்தார்.

போலீசார் அங்கு வந்ததும் அந்த 5 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் புளியந்தோப்பு பெருமாள் (52) என்பவர் பிடிபட்டார். விசாரணை யில், அவருடன் வந்த
வர்கள் நேரு (48), சூரி (47), ராஜன் (50), தம்பிராஜ் (51) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் பண வசூல் செய்து ஜாலியாக செலவு செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ஆலந் தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரு மாளை கைது செய்தனர். பின்னர் ஆலந் தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment