Monday, 22 April 2013

வாலிபர்களால் கற்பழிக்கப்பட்ட மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை


ஆந்திர மாநிலம் அதிலாபாத் மாவட்டம் வெல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 15). பிளஸ்-2 மாணவி. பள்ளி விடுமுறை விடப்பட்டதால் கரீம்நகர் பெத்தபள்ளியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக ரெயில் ஏறிய சாவித்திரி ராமகுண்டா ரெயில் நிலையத்தில் இறங்கி மாற்று ரெயிலுக்காக காத்து நின்றார்.

அப்போது அங்கு வந்த சேகர் என்ற வாலிபர் சாவித்திரியிடம் நைசாக பேசினார். நானும் பெத்தப் பள்ளிக்குத்தான் செல்கிறேன். ரெயில் வர 3 மணி நேரம் ஆகும். அதுவரை பூங்காவில் அமர்ந்து இருப்போம் என்று கூறி அழைத்தார். அதை நம்பிய சாவித்திரி சேகருடன் பூங்காவுக்கு சென்றார்.

உடனே சேகர் செல்போனில் தொடர்பு கொண்டு தனது நண்பர் ராஜுவை வரவழைத்தார். 2 பேரும் சாவித்திரியிடம் இனிக்க இனிக்க பேசி பூங்காவில் உள்ள மறைவிடத்துக்கு அவளை அழைத்து சென்றார். அங்கு வைத்து இருவரும் சாவித்திரியை கற்பழித்தனர். அவளது சத்தம் கேட்டு அங்கு வந்த ஊர்காவல்படை வீரர், மற்றும் பொதுமக்கள் 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். சாவித்திரி மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆனால் கற்பழிக்கப்பட்ட செய்தியை அறிந்த கிராம மக்கள் சாவித்திரியை அவதூறாக பேசினார்கள். இதனால் அவமானம் அடைந்த சாவித்திரி விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment