புதுடில்லி : உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் குறித்த
ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிகம் சக்தி வாய்ந்ததாக தேர்வு செய்யப்பட்ட 27
நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. டில்லியில்
செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் சார்பில்
பாதுகாப்பு வலிமை, மக்கள்தொகை, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை
அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனா 2வது
இடத்திலும், அமெரிக்கா முதல் இடத்திலும் உள்ளன. வலிமையும்,
கட்டுப்பாடுகளும் நிறைந்த நகரங்களில் பீஜிங்கிற்கு அடித்தபடியாகவே டில்லி
உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிமையில் சீனா, அமெரிக்காவை மிக
நெருங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவையே அச்சுறுத்தும் மிகப்
பெரிய சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் பொருளாதாரத்தில்
இந்தியா 8 வது இடத்திலும், ராணுவ வலிமையில் 7வது இடத்திலும், தொழில்நுட்ப
வளர்ச்சியில் பின்தங்கி 17வது இடத்திலும், வெளியுறவு தன்மையில் 11வது
இடத்திலும் உள்ளது.
No comments:
Post a Comment