Sunday, 28 April 2013

கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்த கும்பல்

கர்நாடகத்தில் கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்த கும்பல்
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பாகேவாடி தாலுகா மாரிகாலா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சூலேபாவி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ரேவதி (வயது 20), (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர், பாகேவாடியில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் தேர்வு எழுத காலையிலேயே ரேவதி புறப்பட்டு சென்றார். மதியம் தேர்வு முடிந்ததும் கல்லூரியில் இருந்து திரும்பிய ரேவதி வீட்டிற்கு செல்லவில்லை.

ரேவதியை அவரது பெற்றோர், உறவினர் அக்கம் பக்கத்தில் தேடியும் விசாரித்தும் பார்த்தார்கள். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை காணவில்லை என்று மாரிகாலா போலீஸ் நிலையத்தில் ரேவதியின் தந்தை புகார் செய்தார்.

இந்தநிலையில், நேற்று காலையில் சூலேபாவி கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள காலி நிலத்தில் தலையில் பலத்த ரத்த காயத்துடனும், ஆடைகள் கிழிந்த நிலையில் மாணவி ரேவதி நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். ரேவதியின் பெற்றோர் சென்று பார்த்தபோது அது தங்கள் மகள்தான் என்று கூறி அடையாளம் காட்டினார்கள்.

கல்லூரியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய ரேவதியை யாரோ மர்ம நபர்கள் வாகனங்களில் கடத்தி சென்று, வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்திருப்பதையும், அதன்பிறகு ரேவதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.

முன்னதாக பெல்காம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் பாட்டீல் மற்றும் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், பிரேத பரிசோதனை செய்யும் போது மாணவியின் தொடையில் மராத்தா என மராட்டிய மொழியில் எழுதி இருந்தது தெரியவந்தது.

இதனால் மராட்டியத்தை சேர்ந்த யாராவது மாணவியை கற்பழித்து கொன்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெல்காமை தங்களுக்கு உரியது என்று மராட்டிய மாநிலத்தினர் உரிமை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவி தொடையில் மராத்தா என்று எழுதப்பட்டு இருந்தது. மாணவி கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி திடீரென்று பொதுமக்களும் மாணவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் டயர்களை போட்டும் எரித்தார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 3 மாதத்தில் அந்த பகுதியில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டது. 2-வது சம்பவம் ஆகும். ஏற்கனவே அத்தானி என்ற இடத்தில் கடந்த ஜனவரி மாதம் கல்லூரி மாணவி கடத்தி கற்பழிக்கப்பட்டார். பின்னர் கொலை செய்து உடலை தீவைத்து எரித்தனர். இப்போது மீண்டும் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment