Sunday, 28 April 2013

28 வயது வாலிபருடன் 33 வயது பெண் ஓட்டம்:

28 வயது வாலிபருடன் 33 வயது பெண் ஓட்டம்: கணவர் போலீசில் புகார்
அந்தியூர் அடுத்த வெள்ளி திருப்பூர் அருகே உள்ள எண்ணமங்கலம் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி என்ற மகேஷ்வரி (33). இவர்களுக்கு திருமணமாகி 18 வருடம் ஆகிறது. ஜெகதீஷ் (13), கதிர்வேல் (12) என்ற 2மகன்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.

அந்தியூர் அருகே உள்ள பி.கே. பழையூர் என்ற இடத்தைசேர்ந்தவர் கார்த்தி (வயது 28). பெயிண்டர் வேலைபார்த்து வருகிறார். இவரது சித்தி வீடுபழனிச்சாமியின் வீடு அருகே உள்ளது. இவரது வீட்டுக்கு கார்த்தி அடிக்கடி வந்து செல்லும் போது கார்த்தியுடன் மகேஷ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மகேஷ்வரியை திடீர் என்று காணவில்லை. இதனால் பழனிச்சாமி தனது மனைவியை தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை.

எனவே இதுபற்றி அவர் வெள்ளி திருப்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மனைவி மகேஷ்வரியை கார்த்தி ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், அவருக்கு உடந்தையாக 6 பேர் இருந்ததாகவும், இவர்களிடம் இருந்து தனது மனைவி மகேஷ்வரியை மீட்டு கொடுக்கும்படியும் கூறி உள்ளார்.

இது குறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வெள்ளி திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மகேஷ்வரியை தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment