கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமியை மீட்டனர்.
இனங்கனூர் என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன் முருங்கைக் காய் பறிக்க அந்த சிறுமி சென்றபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.
7 வயதாகும் சிறுமி முத்துலட்சுமி, கிட்டதட்ட 12 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அந்த ஆழ்துளை கிணறு 600 அடி ஆழம் கொண்டது. தகவல் கிடைத்த உடன் அந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் உடனடி மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். அந்த ஆழ்துளை கிணற்றில் சிறுமி சிக்கியதால் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.
அதே நேரத்தில் சிறுமி வீழ்ந்துள்ள பள்ளத்தின் அருகே 3 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது. இதன் மூலம் சிறுமியை மீட்கும் முயற்சியும் நடந்து வந்தது. பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பின் அந்த சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment