புதுடெல்லி : ராணுவ ரகசியத்தை பேஸ்புக் சமூக இணையதளத்தில் வெளியிட்ட கடற்படை அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர் என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ராணுவத்தினர் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பேஸ்புக் சமூக இணையதளத்தில் ராணுவ ரகசியத்தை வெளியிட்ட கடற்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். லடாக் பகுதியில் ராணுவத்தினர் இடையே கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட மோதல் குறித்து ராணுவ விசாரணை நடத்தப்பட்டது. தவறு செய்த 219 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 4 அதிகாரிகளில் 3 பேரை பணிநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா சென்றிருந்த கடற்படை அதிகாரி, ரஷ்ய பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை முடிவில், பணியில் இருந்து விடுவிக்கப்பட் டார். கடற்படை அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மனைவிகளை மாற்றிக் கொள்ளு தல், சக அதிகாரிகளின் மனைவிகளுடன் கள்ளத் தொடர்பு, பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவை முறையாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளத் தொடர்பு மற்றும் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய பல அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment