ரஷ்யாவின் மாஸ்கோ பகுதியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மாஸ்கோவில் உள்ள ரமேன்ஸ்கோயி என்ற பகுதியில் 20 - 76 வயது வரம்புக்கு உட்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 36 நோயாளிகள் மற்றும் 2 மருத்துவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்து நடந்த சமயத்தில் நோயாளிகள் அனைவரும் தங்கள் படுக்கைகளில் இருந்துள்ளனர். ஜன்னல்களிலும் தடுப்புக் கம்பிகள் இருந்துள்ளதால், யாரும் தப்பி ஓட இயலவில்லை.
மருத்துவமனையில் மளமளவென பரவிய தீயினை கட்டுபடுத்த தீ அணைப்பு படையினர் கடுமையாக போராடிய்ப்பின்னரும் 3 பேரை மட்டும்தான் உயிருடன் மீட்கமுடிந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment