Saturday, 27 April 2013

சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காத நபரை அடித்து கொன்ற ஓட்டல் உரிமையாளர்


புதுடில்லி:ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் வீடு திரும்பியவர், அடித்துக் கொல்லப்பட்டார்.டில்லியைச் சேர்ந்தவர் தீபக் சிங், 35. இவரின் தந்தை, டில்லி விமான நிலைய பணியாளர் என்பதால், அங்குள்ள பணியாளர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார்.நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள ஓட்டலில், தீபக் சிங் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தார். கையில் பணம் இல்லாததால், ஓட்டல் நிர்வாகத்தினர் அதிக பணம் கேட்பதாக கூறி, வாக்குவாதம் செய்தார். பின், பணம் கொடுக்காமலேயே வீடு திரும்பினார்.சற்று நேரத்தில், தீபக்கின் வீட்டிற்கு, ஓட்டல் உரிமையாளர் உட்பட, 10 பேர் வந்து தகராறில் ஈடுபட்டனர். தீபக்கின் சகோதரி, அவர் சாப்பிட்டதற்கான தொகையை, அவர்களிடம் கொடுத்த பின்னும், தீபக்கை கடுமையாக தாக்கினர்.இரும்பு கம்பியால் தீபக்கின் தலையில் அடித்து, அவரது முகத்தையும் சிதைத்தனர். பின், அவரை நான்காவது மாடிக்கு தூக்கி சென்று, கீழே தள்ளினர். படுகாயமடைந்த தீபக் சிங், சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள ஓட்டல் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment