Monday, 22 April 2013

தொடரும்-அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு - 5 பேர் பலி


அமெரிக்காவின் சியாட்டெல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம மனிதன் அங்கு குடியிருப்பவர்களை சுட்டுக் கொன்று விட்டதாக நேற்றிரவு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த கார் நிறுத்துமிடம் அருகே மயங்கிக் கிடந்த ஒருவரை காப்பாற்றச் சென்ற போது, மறைந்திருந்த ஒருவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.

போலீசார் திருப்பிச் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவன் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான்.

பின்னர், அடுக்குமாடி குடியிருப்பில் 4 பிணங்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மேலும் சிலரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டவன் யார்? அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களை அவன் சுட்டுக் கொன்றது ஏன்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment