திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடு்த்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால்பொதுக்குடி பாலர் தெருவை சேர்ந்த முஸ்தபா மகன் அசன்மைதீன் (32). இவர் கேரளாவில் தொழில் செய்து வருகிறார். அசன்மைதீன் மனைவி ஜன்னத் பள்ளக்கால்பொதுக்குடியில் வசித்து வருகிறார். அசன்மைதீன் கட்டியுள்ள வீட்டில் வியாழக்கிழமை வெள்ளையடிப்பு பணி நடைபெற்றது. பணி முடிவடைந்த நிலையில் மாலையில் பாலர் தெருவில் வழிப்பாதையில் இருந்த வெள்ளையடிக்க பயன்படுத்திய ஏணி அப்புறப்படுத்தவில்லையாம். அப்போது அங்கு வந்த இதே பகுதியை சேர்ந்த சொள்ளமுத்து மகன் அரிகிருஷ்ணன், மர ஏணி தட்டியதில் தவறி கீழே விழுந்தாராம்.இதையடுத்து அரிகிருஷ்ணன் அசன்மைதீன் குடும்பத்தினரை அவதூறாக பேசினாராம். வீட்டில் தனியாக இருந்த அசன்மைதீன் மனைவியையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர்களுக்கு அரிகிருஷ்ணன் தரப்பை சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் உருவானது.
இது குறித்து ஜன்னத் அளித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி போலீஸார் அரிகிருஷ்ணன், அவரது சகோதரர் மூக்காண்டி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இன்று ஆலங்குளம் டி.எஸ்.பி. லயோலாஇக்னேஷியஸ் தலைமையில் பள்ளக்கால்பொதுக்குடியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment