வாஷிங்டன், ஏப். 27-
அமெரிக்காவில் வாஷிங்டனில் தம்பா பெண்கள் சங்கம் உள்ளது. இங்கு நிதி திரட்டுவதற்காக “ஷாம்பெயின்” (திராட்சை ரசம் மது) குடிக்கும் போட்டி நடந்தது. அதற்காக 400 கோப்பைகளில் திராட்சை மது ரசம் ஊற்றப்பட்டிருந்தது. அதில், ஒன்றில் மட்டும் ஒரு தனியார் நிறுவனம் அன்பளிப்பாக அளித்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை போட்டு இருந்தனர். அந்த மது கோப்பை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கே அதில் போடப்பட்டிருக்கும் வைரம் சொந்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் போட்டி கடுமையாக இருந்தது. அதில் பங்கேற்ற பெண்கள் ஒரு கோப்பை ரூ.1000 வீதம் மது வாங்கி குடித்தனர்.
இதற்கிடையே, வைரம் போட்டிருந்த கோப்பை மிரியம் என்ற 80 வயது பெண்ணுக்கு கிடைத்தது. அந்த கோப்பையில் ஊற்றப்பட்டிருந்த மதுவை குடித்த மிரியம் அதில் போடப்பட்டிருந்த வைரத்தையும் சேர்த்து தவறுதலாக விழுங்கிவிட்டார். அதைப் பார்த்ததும் மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். இருந்தும் அதை கண்டு கொள்ளாத அவர் முடிவில் சுதாரித்து தான் வைரம் விழுங்கியதை தெரிந்து கொண்டார்.
பின்னர் டாக்டரிடம் சென்று “எக்ஸ்ரே” எடுத்து தனது வயிற்றுக்குள் வைரம் இருப்பதை அறிந்து வெளியே எடுத்தார். மேலும் நகை கடைக்கு சென்று அதன் தரத்தை பரிசோதித்தார்.
No comments:
Post a Comment