Sunday, 28 April 2013

பூமியை நெருங்கும் சனி

பூமியை நெருங்கும் சனி கோளை பார்க்க  சென்னை பிர்லா கோளரங்கத்தில் விசேஷ ஏற்பாடு

பூமியை சுற்றி வரும் கோள்களில் சனிக்கோள் பூமியில் இருந்து 165 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது சாதாரண விண்மீன்கள் போலத்தான் தெரியும். ஆனால் இன்று முதல் சூரியனுக்கு எதிராக சனிக்கோள் வருகிறது.

அதாவது 132.2 கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை சனிக்கோள் நெருங்குகிறது. இதனால் சனிக்கோளை தெளிவாக பார்க்க முடியும். சூரியன் மறைந்த பிறகு கிழக்கு திசையில் சனிக்கோள் தெரியும். மற்ற விண்மீன்கள் போல் அல்லாமல் மிகப்பிரகாசமாக இது ஒளிருவதை நாம் காணலாம்.

சனிக்கோளை சுற்றி ஒரு வளையம் போன்ற காட்சி இருக்கும். இந்த காட்சியை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. சனிக்கோளை பொதுமக்கள் பார்ப்பதற்கு சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு 4 நவீன தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தொலைநோக்கிகள் மூலம் இரவு 8 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள் பார்க்கலாம். தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது, இந்த தகவலை பிர்லா கோளரங்க இயக்குனர் டாக்டர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment