Monday, 22 April 2013
680 கிராம் எடையுடன் 5 மாதத்தில் குழந்தை பெற்ற பெண்
ஜெட்டாவை சேர்ந்தவர் ஷக்கீல். இவர் அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் பராமரிப்பு என்ஜினீயர் ஆக பணிபுரிகிறார். இவரது மனைவி ஷகீன் அகமது. இவர் கர்ப்பிணியாக இருந்தார்.
இந்ந நிலையில் 22-வது வாரத்தில் அதாவது 5-வது மாதத்தில் அவரது கர்ப்பபையில் இருந்து பனிக்குட நீர் கசிந்து 3 வாரமாக வெளியேறியது. இதனால் கருவில் வளரும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. எனவே, அதற்கு சிகிச்சை அளித்து வயிற்றில் வளரும் தனது குழந்தையை காப்பாற்றும்படி ஜெட்டாவில் உள்ள 5 ஆஸ்பத்திரிகளுக்கு ஷகீன் சென்றார்.
குழந்தையை காப்பாற்ற முடியாது. வேண்டுமென்றால் கருக்கலைப்பு செய்யலாம் என கூறி டாக்டர்கள் கைவிரித்தனர். என்ன செய்வதென தவித்த வேளையில் அவரது பெற்றோர் ஷகீனை குஜராத் மாநிலம் அகமதாபாத் வரும்படி அழைத்தனர்.
அதன்படி அவரும் கடந்த ஜனவரி 1-ந்தேதி அங்கு சென்று அப்பல்லோ ஆஸ்பத்திரியில் டாக்டர்களை சந்தித்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஷெரு ஜமீந்தார் சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்டார். இருந்தும் பனிக்குட நீர் வெளியேறியபடியே இருந்தது.
அதை தொடர்ந்து 5 மாதத்திலேயே ஷகீன் உயிருடன் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தை அப்போது 680 கிராம் மட்டுமே எடை இருந்தது. பின்னர் ஆஸ்பத்திரியில் 3 மாதங்கள் இன்குபேட்டர் கருவியில் வைத்து அதிநவீன மருத்துவ வசதிகளுடன் அக்குழந்தை பராமரிக்கப்பட்டது.
தற்போது அது 1 கிலோ 500 கிராம் எடையாக அதிகரித்துள்ளது. அதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது தாயுடன் நலமாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment