நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் செய்யது அலி பாத்திமா (வயது47). இவர் மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்த வசந்தி, குமுதம், ஆனந்தி, பிரியா ஆகியோரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
இதற்கு மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்தார். இந்த நிலையில் செய்யது அலி பாத்திமாவிடம் கூடுதல் வட்டி தருமாறு கேட்டனர். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து செய்யது அலி பாத்திமாவிடம் திருநகருக்கு வாருங்கள், பணம் சம்பந்தமாக பேசுவோம் என்றனர். இதனை நம்பி செய்யது அலி பாத்திமா திருநகர் வந்தார்.அங்கு நின்ற வசந்தி, குமுதம் உள்பட 4 பேரும் அவரை ஒரு காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
பின்னர் அவரை அய்யர்பங்களாவில் உள்ள பிரியாவின் வீட்டில் அடைத்து வைத்து சிறை வைத்தனர். இதுகுறித்து அவர்கள் செய்யது அலி பாத்திமாவின் மகள் மற்றும் உறவினர்களிடம், ரூ.10 லட்சம் தந்தால்தான் செய்யது அலி பாத்திமாவை விடுதலை செய்வோம் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் மதுரை வந்தனர். இதை அறிந்ததும் வசந்தி, குமுதம், ஆனந்தி, பிரியா ஆகியோர் செய்யது அலி பாத்திமாவை ஒரு காரில் ஏற்றி அந்த பகுதியில் விட்டு விட்டு சென்று விட்டனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய செய்யது அலி பாத்திமா இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார், பணம் கேட்டு மிரட்டிய 4 பெண்களையும் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment