சேத்தூர்: சேத்தூர் அருகே, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை வெட்டி கொன்ற கணவர், தடுத்த மகளை வெட்டி, தானும் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம், சேத்தூரை சேர்ந்தவர், கிருஷ்ணசாமி, 40; விவசாயி. இவரது மனைவி கனகலட்சுமி, 35. கிருஷ்ணவேணி, 11, கார்த்திக் குமார், 7, என, இரு குழந்தைகள் உள்ளனர். மனைவி மீது சந்தேகப்பட்ட கிருஷ்ணசாமி, அடிக்கடி தகராறு செய்ததால், குழந்தைகளுடன் கனகலட்சுமி, இரு மாதங்களுக்கு முன், தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். நான்கு நாட்களுக்கு முன், உறவினர்கள் சமாதானம் பேசி, கணவருடன் அனுப்பினர்.
நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு, குடிபோதையில் இருந்த கிருஷ்ணசாமி, மனைவியிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டினார். தடுத்த மகளுக்கும் வெட்டு விழுந்தது.
கனகலட்சுமி வீட்டிலேயே இறந்தார்; கிருஷ்ணவேணி, ராஜபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய கிருஷ்ணசாமி, நேற்று காலை, தென்னந்தோப்பில் விஷம் குடித்து, இறந்து கிடந்தார். சேத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment