Thursday, 25 April 2013

விஷம் கொடுத்து குழந்தைகள் கொலை:


சிவகங்கை: சிவகங்கை அருகே, குடும்ப பிரச்னையில் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலைக்கு முயன்றதில், இரு குழந்தைகள் பலியாயினர். சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர், ராமசுப்பிரமணியன்; கல்லலில், மளிகை கடை நடத்துகிறார். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு, கல்யாணி, 7, கார்த்திக், 3, என, இரு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கமுள்ள ராம சுப்பிரமணியனுக்கும், மனைவிக்கும் அடிக்கடி சண்டை இருந்தது. மனம் உடைந்த தமிழரசி, நேற்று முன்தினம் இரவு, இரு குழந்தைகளுக்கு எலி மருந்தை கொடுத்து, அவரும் எலி மருந்தை சாப்பிட்டதில், மூவரும் மயங்கினர். உயிருக்கு போராடிய அவர்களை, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். மேல் சிகிச்சைக்காக, மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குழந்தைகள் இருவரும் இறந்தனர். தமிழரசி சிகிச்சையில் உள்ளார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment