இச் சகோதரர்களின் தாயார் என்ன சொல்லியுள்ளா ?
சந்தேக நபர்கள் இருவருடைய தாயார் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். “எனது மகன்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டது உளவுத்துறை எஃப்.பி.ஐ.யின் செட்டப். அவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக உளவுத்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார்கள்” என்கிறார் தாய். இருவரில் மூத்தவர் போலீஸ் சூற்றிவளைப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றையவர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும்தான் குண்டு வைத்தவர்கள் என்பதை ஏறக்குறைய உறுதியாக சொல்கிறது எஃப்.பி.ஐ. இந்த நிலையில், மகன்களைப் பற்றி சில விஷயங்களை வெளியிட்டுள்ளார், அவர்களது தாயார். “எல்லாமே உளவுத்துறையின் செட்டப்” என்று கூறும் அவர், விலாவாரியாக என்ன சொல்கிறார்?
“எனது மகன்கள் பற்றி உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு நன்றாகவே தெரியும். காரணம், அவர்கள் இருவரும் உளவுத்துறை எஃப்.பி.ஐ.யின் கன்ட்ரோலிலேயே கடந்த சில ஆண்டுகளாக இருந்தார்கள். எமது வீட்டுக்கு உளவுத்துறை எஃப்.பி.ஐ. அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்வார்கள். எனது மகன்களுடன் பேசுவார்கள். என்னுடன் பேசுவார்கள். உளவுத்துறை அவர்களை ஒரு கருவியாக உபயோகித்துக் கொண்டிருந்தது. இன்டர்நெட்டில் குறிப்பிட்ட இணையதளங்களுக்கு சென்று நோட்டம் விடுமாறு அவர்களுக்கு (மகன்களுக்கு) சொல்லிக் கொடுத்ததே உளவுத்துறை எஃப்.பி.ஐ.தான்.
அவர்கள் எந்தெந்த இணையதளங்களுக்கு போவார்கள் என்பது உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு நன்றாகவே தெரியும். இப்போது ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல நாடகம் ஆடுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக எனது மூத்த மகனை எ.ப்.பி.ஐ. அதிகாரிகள் மிக நன்றாகவே அறிவார்கள்” என்கிறார் அவர். ஆகா… இந்த விவகாரம் வேறு ஒரு திசையில் ட்விஸ்ட் அடிக்க போகிறதா ?
இல்லை ரஷயாவில் உள்ள "ரஷ்ய பின்லேடனை" சிக்கவைக்க முயற்ச்சியா ?
பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுக்கும், ரஷ்ய-செசனிய தீவிரவாத இயக்கத்துக்கும் இடையே தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது... ரஷ்யாவில் தீவிரவாத நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்ட ‘கொகாசஸ் எமிரேட்’ என்ற தீவிரவாத இயக்கம், இந்த குண்டுவெடிப்பில் தொடர்பு பட்டிருக்கலாம் என்பதே சந்தேகம். "டோகு உமர்ரோவ்" என்ற செஸ்னிய இஸ்லாமிய கடும் போக்காளரான நபரின் தலைமையில் இயங்கும் இயக்கம் அது. ரஷ்யாவில் பொதுமக்கள் மீது பல தாக்குதல்கள் இவரது உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட காரணத்தால், ‘ரஷ்யாவின் பின்லேடன்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு.
தற்போது எப்.பி.ஐ சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் ஈமெயிலில் "டோகு உமர்ரோவ்" இவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்குமேயானால், கதை எப்படி மாறும் என்று நாம் அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment