புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சுவாமி அக்னிவேஷ் கூறியதாவது:-
கற்பழிப்பு போன்ற சமூகக் கொடுமைகளை போலீசாரால் மட்டுமே கட்டுப்படுத்தி விட முடியாது. அசைவ உணவுகளை சாப்பிடுவதை மக்கள் கைவிட்டால் கற்பழிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிடும். மது குடிக்கும் பழக்கம் அறவே இல்லை என்ற நிலை வரும் போது கற்பழிப்புகள் முற்றிலுமாக அற்றுப்போகும்.
ஏகப்பட்ட குற்றங்களும், விபத்துகளும் மது போதையில் தான் ஏற்படுகின்றன. டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கும், 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திலும் மது போதையே காரணமாக இருந்துள்ளது.
ஒரு மனிதனின் இயல்பான சிந்தனையை மது இடைமறித்து விடுகிறது. மதுவினால் வருமானம் கிடைக்கிறது என்பதால், மது தயாரிப்பை அரசு தடை செய்ய மறுக்கிறது. மாநில அரசுகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று போட்டிப்போட்டுக் கொண்டு மது உற்பத்தியில் களமிறங்கியுள்ளன.
மது குடிப்பதால் ஏற்படும் தீமையைப் பற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்த இப்போது பள்ளிகள் முன்வருவதில்லை.
குற்றங்களுக்கு தனிநபர்களை மட்டுமே காரணம் என்று நாம் பழி சொல்லி விட முடியாது. எல்லா குற்றங்களுக்கும் ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment