இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் உட்பட ஒருவரின் குணாம்சங்களையும் முழுமையான ஆளுமையையும் தெரிவித்துவிட முடியும்என்று ஆய்வாளர்கள் கண்டறியந்துள்ளனர்.
பேஸ்புக்கில்
இருக்கும் ஒருவர் தனக்கு பிடித்தமான செய்தி, கருத்து, கட்டுரை, புகைப்படம்
அல்லது காணொளியை விரும்புகிறார் என்றால் அதை தெரிவிப்பதற்கு லைக் என்கிற
பொத்தானை அழுத்தினால் அவர் அதை விரும்புகிறார் என்று பொருள்.
இப்படி ஒருவர் தனது முகநூலில் எதையெல்லாம் விரும்புகிறார் என்று தொகுத்துப்
பார்த்தால், அவர் ஆணா, பெண்ணா என்பது முதல், அவர் எந்த அரசியல் கட்சி
ஆதாரவாளர், என்ன விதமான பொருளாதார கருத்தாளர், எந்த மதத்தவர், அவரது
புத்திக்கூர்மையின் அளவு என்ன என்பது வரை ஒருவரின் பெரும்பான்மை
குணாம்சங்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக கணித்துச்சொல்ல முடியும் என்று இந்த
ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வுக்காக சுமார் 58,000 முகநூலர்களின் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.
இவர்கள் தங்களின் முகநூலில் என்ன விதமான விஷயங்களை விரும்பினார்கள் என்கிற
விபரங்களும், இவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்கிற விபரங்களையும்
சேகரித்த ஆய்வாளர்கள், இவற்றை முதலில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எனப்படும்
உளவியல் தன்மைகளைக் கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.
அடுத்ததாக, இந்த முகநூலர்கள் விரும்பி ‘லைக்’ போட்ட விபரங்களை அல்கோரிதம்
எனப்படும் நெறிமுறை கணக்கிடும் மென்பொருளில் உள்Zடு செய்தார்கள்.
இவற்றின் மூலம் கணிக்கப்பட்ட தகவல்களில் பெரும்பாலானவை சரியாக அமைந்திருந்தது.
அதேசமயம், தனிமனிதரின் முகநூல் செயற்பாடுகளை அவருடைய வெளிப்படையான
விருப்பம் இல்லாமலே மற்றவர்களால் பார்க்க முடியும். பயன்படுத்த முடியும்,
குறிப்பிட்ட நபரின் அந்தரங்க அடையாளங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிற
நிலைமை தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் என்கிற
கவலையும் எழுந்துள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவுகள், முகநூலில்
அதிகரித்து வரும் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும்
அதிகப்படுத்தக்கூடும்
No comments:
Post a Comment