Monday, 22 April 2013

ரத்தம் உறையாமை நோயை தவிர்ப்போம்

 உலக ஹீமோபிலியா அமைப்பானது சமூக இணைய தளத்தை துவங்கி, ரத்தம் உறையாமை நோயை தடுக்க  தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 113 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.

கனடாவின் மான்ட்ரீல் நகரில் உலக ஹீமோபிலியா அமைப்பை (டிபிள்யு ஹெச் எப்) கடந்த 1963-ல் பிராங்க் ஸ்னாபல் என்பவர் துவக்கினார். கடந்த  1989 முதல் அவரது பிறந்தநாளான ஏப்ரல் 17-ல் உலக ஹீமோபிலியா நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.ஹீமோபிலியா என்பது ரத்தம் உறையாமல்  போகும் பரம்பரை நோய். சாதாரணமாக மனித உடலில் ஏதாவது காயம் ஏற்படும்போது வெளியேறும் ரத்தம் சிறிது நேரத்தில் உறைந்து விடும்.

ரத்தம் சிறிது நேரத்தில் உறைவது என்பது இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம். ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டோருக்கு உடம்பில் இருந்து  வெளியேறும் ரத்தம் எவ்வளவு நேரமானாலும் உறையாது. அதிக ரத்தப்போக்கு ஏற்படும் போது உயிரிழப்புகூட நிகழலாம். ஹீமோபிலியாவால்  பாதிக்கப்பட்ட ஜீனில் இருந்து பரம்பரையாக பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மனித உடம்பில் இருந்து வெளியேறும் ரத்தம் உறைவதற்கு 13 வகையான காரணிகள் உள்ளன. அதில் புரோட்டீன் பங்கு மிக முக்கியமானது.  ஹீமோபிலியாவில் ஏ, பி என 2 வகைகள் உள்ளன. ஏ பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரத்தம் உறையும் காரணி 8 இல்லாமலும், பி பிரிவை  சேர்ந்தவர்களுக்கு ரத்தம் உறையும் காரணி 9 இல்லாமல் இருக்கும்.

மரபணு குறைபாடு காரணமாக அல்லது ரத்தத்தை உறையச்செய்யும் பிளாஸ்மா காரணிகளின் செயல்பாடு குறைவு காரணமாக இந்த நோய்  உண்டாகிறது. உடம்பில் காயம் ஏற்படும் போது திசுக்கள் பாதிக்கப்படுவதால் ரத்தம் வெளியேறுகிறது. ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை  அணுக்கள், தட்டணுக்கள் உள்ளன. ரத்தத்தை உறைய வைப்பதில் ரத்த தட்டணுக்கள் பெரும் பங்கு வகிக்கிறது.

ஹீமோபிலியா பாதிப்பு ஆண்களுக்கு அதிகம் உள்ளது. உலகத்தில் 75 சதவீத மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரம் பேரில்  ஒருவருக்கு இந்த நோய் உள்ளது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் ஆண்கள், பிறக்கும் 400 குழந்தைகள் ஹீமோபிலியாவால்  பாதிக்கப்படுகிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறுவயதில் ஹீமோபிலியா நோய் கண்டறியப்படுகிறது.

மூன்றில் 2 பேருக்கு பரம்பரை காரணமாக நோய் ஏற்படுகிறது. பிரத்யேகமான ரத்த பரிசோதனை, குழந்தை பிறந்த பிறகு சோதனை, கர்ப்ப காலத்தில்  பெண்களுக்கு சோதனை மூலம் நோய் கண்டறியப்படுகிறது. இந்நோய்க்கு இது வரை சரியான சிகிச்சை முறையை கண்டுபிடிக்கவில்லை. ரத்தத்தை  உறைய வைக்க இந்த காரணிகளை ஊசிமூலம் உடம்பில் செலுத்தலாம்.

ஹீமோபிலியா நோயை அறிந்து அதை பற்றிய விழிப்புணர்வை நாம் பிறருக்கு ஏற்படுத்த வேண்டும். ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டோர் மரபணு  ஆலோசனைப்படி திருமணம், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹீமோபிலியாவை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்  ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment