Thursday, 25 April 2013

அமெரிக்கா: 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்க தடை

அமெரிக்கா: 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்க தடை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நோய்களுக்குட்பட்டு அதிக அளவில் உயிரிழப்பு நிகழ்கிறது. உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட மிக சாதாரணமாக சிகரெட் பிடிக்கின்றனர். எனவே, நியூயார்க் மக்களை காப்பாற்ற அந்த நகர நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்கிறது.

அதன்படி, நியூயார்க் கடைகளில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்க தடை செய்யும் சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதாரமான நகரமாக நியூயார்க்கை மாற்ற முடியும் என நகர கவுன்சில் சபாநாயகர் கிறிஸ்டின் குயின் தெரிவித்துள்ளார்.

இளம் வயதில் சிகரெட் பிடித்து பழகுபவர்கள் 21 வயதில் முழு நேரமும் சிகரெட் பிடிக்க தொடங்கி விடுகிறார்கள். அதை தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment