சட்டசபையில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் எம்.ஆறுமுகம் கோயம்புத்தூரில் மத சம்பந்தமான பதற்றம் நிலவுவதாக கூறினார்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
கோயம்புத்தூரில் மதசம்பந்தமான பூசல்கள் ஏதுமில்லை. இரு மத்தினரிடையே அவ்வப்போது எழும் சிறு சிறு பிரச்சினைகள் குறித்து காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையாளர் இரு மதத்தினரையும் அழைத்து அமைதிக் கூட்டங்கள் நடத்தி அமைதிக் குழுக்களை ஏற்படுத்தி மத நல்லிணக்கம் தொடர தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
மத பூசல்களை தூண்டிவிடுவோர் மீதும், ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
No comments:
Post a Comment