Thursday, 25 April 2013

மிரட்டிய மைத்துனியை கொன்ற வாலிபர் கைது


புதுடெல்லி : பரிசு கேட்டு வாங்கித் தராததால், கள்ளத் தொடர்பை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டிய மைத்துனியை கழுத்து நெரித்து கொன்றவர் கைதானார்.
டெல்லியை சேர்ந்தவர் சேத்தன் பிரகாஷ் (28). மருத்துவமனை உதவியாளர். இவரது மைத்துனி ராக்கி (28). ஸ்வரூப் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஸ்வரூப் நகரில் உள்ள ராக்கியின் வீட்டுக்கு சென்றார் பிரகாஷ்.

அப்போது ராக்கி, ‘இப்போதெல்லாம் எனக்கு பரிசு பொருள் எதுவும் வாங்கித்தருவதில்லை‘ என்றார். அதற்கு பிரகாஷ், ‘எனக்கு திருமணம் ஆகிவிட்டதால், தற்போது எதுவும் வாங்கித்தர முடியாது‘ என்றார். இதையடுத்து ராக்கி, ‘எனக்கு ஏதாவது பரிசு பொருள் வாங்கித் தர வேண்டும். தவறினால் நமக்குள் இருக்கும் கள்ளத் தொடர்பை அனைவரிடமும் சொல்லி விடுவேன்‘ என்று மிரட்டினார்.

இதையடுத்து ராக்கி, எப்போதும் போல சமையலறைக்கு சென்று சுத்தம் செய்து கொண்டிருந்தார். ராக்கியின் மிரட்டலை கேட்டு ஆத்திரமடைந்த பிரகாஷ், துப்பட்டாவை எடுத்து வந்து ராக்கியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். அதைத் தொடர்ந்து ராக்கியிடம் இருந்த தங்க கம்மல், வெள்ளி கொலுசு மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பியோடினார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராக்கியின் செல்போன் இருக்கும் டவரை வைத்து கொலையாளி பதுங்கியிருக்கும் இடத்தை உறுதி செய்தனர்.  போலீ சார் நேற்று முன்தினம் சேத்தன் பிரகாஷை கைது செய்து செய்தனர். விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார் பிரகாஷ். அவரிடம் இருந்த ராக்கி யின் பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment