நாசிக்:மாலேகாவைச் சேர்ந்த பாத்திர வியாபாரி, ஏழ்மையின் காரணமாக, தன் குழந்தைகள் நான்கு பேரை கொன்று, மனைவியுடன் தற்கொலை செய்து இறந்தார்.மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவைச் சேர்ந்தவர் சுரேஷ் சாகு. இவர், அப்பகுதியில் வீடு வீடாக சென்று பாத்திர வியாபாரம் செய்து வந்தார். போதிய வருமானம் இல்லாததால், குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்ட சுரேஷ், தன் குழந்தைகள் நால்வரையும், கழுத்தை நெரித்து கொலை செய்தார்.பின், தன் மனைவியுடன் தூக்கிட்டு இறந்தார். நாள் முழுவதும் சுரேஷின் வீடு உட்புறமாக பூட்டி இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அவரது வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது, அனைவரும் இறந்து கிடந்தது தெரிந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Saturday, 27 April 2013
வறுமைக்கு பயந்து நான்கு குழந்தைகளை கொன்று மனைவியுடன் வியாபாரி தற்கொலை
நாசிக்:மாலேகாவைச் சேர்ந்த பாத்திர வியாபாரி, ஏழ்மையின் காரணமாக, தன் குழந்தைகள் நான்கு பேரை கொன்று, மனைவியுடன் தற்கொலை செய்து இறந்தார்.மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவைச் சேர்ந்தவர் சுரேஷ் சாகு. இவர், அப்பகுதியில் வீடு வீடாக சென்று பாத்திர வியாபாரம் செய்து வந்தார். போதிய வருமானம் இல்லாததால், குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்ட சுரேஷ், தன் குழந்தைகள் நால்வரையும், கழுத்தை நெரித்து கொலை செய்தார்.பின், தன் மனைவியுடன் தூக்கிட்டு இறந்தார். நாள் முழுவதும் சுரேஷின் வீடு உட்புறமாக பூட்டி இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அவரது வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது, அனைவரும் இறந்து கிடந்தது தெரிந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment