Friday, 26 April 2013

மயங்கிய தோழியை தோழர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்


மும்பையில் நிகழ்ந்துள்ள ஒரு சம்பவத்தில், 13 வயது சிறுமி ஒருவருக்கு அவரது தோழியே மயக்க மருந்து கொடுத்து, 4 பேர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த உதவி செய்திருக்கிறார்.

மும்பை மாநிலம் சாண்டாக்ராஸ் பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு தோழி அழைத்ததன் பேரில் இந்த சிறுமி சென்றுள்ளார். தோழியின் வீட்டில் ஏற்கனவே 4 ஆண்கள் இருந்ததை கண்ட சிறுமி, தனது தோழியிடம் விசாரித்ததில், அந்த நால்வரும் எனது தோழர்கள் என சிறுமியின் தோழி கூறியிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து, சிறுமிக்கு அவரது தோழி மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுத்து அவர் மயங்கிய பிறகு, அந்த வீட்டில் இருந்த நால்வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்த சிறுமி, தனது தோழி மற்றும் நான்கு பேரின் பெயர்களையும் புகாரில் பதிவு செய்திருக்கிறார்.

புகாரின்பேரில் போலீசார் குற்றம் சாற்றப்பட்டவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment