கத்தரிக்கு முன்பே வெயில் தகிக்க தொடங்கிவிட்டது. சென்னை, மதுரை, திருப்பூர், கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. சாலைகளில் அனல் காற்று வீசுவதால், மக்கள் வெளியில் செல்லவே அஞ்சுகின்றனர்.இது ஒருபுறம் இருக்க கோடை காலத்தில் வரக்கூடிய அம்மை நோய் பரவத் தொடங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 2 பேர் இறந்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேர் அம்மை நோயில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வீடுகளிலேயே இயற்கை முறையிலான சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர் இளங்கோ கூறியதாவது:
கோடை காலத்தில் அம்மை நோய் பரவுவது இயல்பான ஒன்றுதான். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் வசதிகள் உள்ளன. ஆனால், பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. இதனால் பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே மருத்துவம் பார்க்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு குறைவான அளவே வருகின்றனர். அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தும்மல், இருமல் மூலம் காற்றில் மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடும்.
பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால், மற்றவர்களுக்கும் நோய் பரவக்கூடும். அதனால், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். குறிப்பாக இந்த நோயினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிகப்படியான வெப்பத்தினால் குழந்தைகள் உடல் சூடாகி சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். தாய்மார்கள் அதுபோன்ற நேரத்தில் மருத்துவரிடம் சென்று குழந்தைகளை பரிசோதிக்க வேண்டும். கவனிக்காமல் விட்டால் குழந்தைக்கு அம்மை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment