Tuesday, 23 April 2013

வாய் புற்றுநோயால் 3 லட்சம் பேர் பாதிப்பு

மதுரை:"இந்தியாவில் 3 லட்சம் பேர் வாய் புற்றுநோயால் பாதித்துள்ளதாக', நளா பல் மருத்துவமனை சார்பில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அனுஷா பேசியதாவது:வெற்றிலை பாக்கு, பான்பராக் உட்பட புகையிலையுடன் கூடிய பாக்கு கலப்புகளை எப்போதும் மென்று கொண்டிருப்பவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மெல்லும் போது சுரக்கும் உமிழ் நீருடன் கலக்கும் பாக்குச் சாறு, வாய்க்குள் உள்ள கன்ன உள் சுவர்களை பாதிக்கிறது. வாய் உள் சுவர்களில் உள்ள தசை நார்கள் நாளடைவில் இறுகி, வாயை அசைக்க முடியாமல் பாதித்து, புற்றுநோய் ஏற்படுகிறது.பாதிப்பு தெரிந்தவுடன் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால், 80 சதவீதம் குணமடைய வாய்ப்புள்ளது. நாட்டில் 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதித்துள்ளதில், 3 லட்சம் பேர் வாய் புற்றுநோயால் அவதியுறுகின்றனர், என்றார்.இலவச மருத்துவ ஆலோசனை அட்டைகளை, மேயர் ராஜன்செல்லப்பா வழங்கினார். வாய்ஸ் டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது.

No comments:

Post a Comment