Saturday, 27 April 2013

பாலியல் வன்முறை குறித்து புகார் அளிக்காவிட்டால் தண்டனை: உச்ச நீதிமன்றம்

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து புகார் அளிக்காவிட்டால் தண்டனை: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, ஏப். 27-
பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுபடுத்த பாலியல் குற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் ஒரு சிறுமி கற்பழித்து கொலைசெய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் குற்றவாளியின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் மதன் பி லோகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில் மேலும் கூறியதாவது:-

ஒரு மைனர் குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்கள் நடந்திருப்பது தெரிந்த பின்னும், ஒருவர் அது பற்றி புகார் கொடுக்காததும் குற்றமே. புகார் அளிக்காமல் இருப்பதன் மூலம் குற்றவாளிகளை சட்டப்படியான தண்டனைகளில் இருந்து காப்பாற்றுகின்றனர். எனவே குற்றவியல் சட்டத்தின்படி குற்றவாளிகள் தப்பிக்க அவர்கள் பொறுப்பாகிறார்கள்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தை பாதுகாப்பு சட்டம், 2012 -ன் பிரிவு 20- தைப் பின்பற்றி இது போன்ற சம்பவம் குறித்து அறிந்த ஊடக பணியாளர்கள், ஓட்டல், கிளப், ஸ்டுடியோ போன்றவற்றின் பொறுப்பாளர்கள் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். சம்பவம் தெரிந்தும் தகவல் கொடுக்காதவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்..

No comments:

Post a Comment