சர்ச்சைக்குரிய விதத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸ்
நிறுவனம் அண்மையில் ஒருநபர் தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்ற விளம்பரத்தை
வெளியிட்டது. இந்த விளம்பரம் பெருத்த சர்ச்சைகளையும் எதிர்ப்பையும்
ஏற்படுத்தியது. இதை அடுத்து இந்த விளம்பரத்துக்காக மன்னிப்பு கேட்டது
தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டர்ஸ்.
ஹூண்டாய் மோட்டர் கம்பெனி தனது கார்பன் வெளியீடு அறவே அற்ற கார் குறித்த விளம்பரத்தை வெளியிட்டது. அதில் ஒரு நபர் தற்கொலை முடிவு எடுக்கிறார். பின்னர் தனது காரில் உள்ள புகை வெளியேறும் குழாயில் இருந்து ஒரு ஹோஸ் பைப்பை செருகி அதனை காருக்குள் செலுத்தி, கார்பன் அதிகம் வெளியேறி மூச்சடைத்து உயிர் துறக்க எண்ணுவதாகக் காட்டப்படும். ஆனால் காரில் இருந்து கார்பன் வெளியேறாமல், இவர் ஏமாற்றம் அடைவதாகவும், இந்த வகையில் தன்னால் தற்கொலை செய்து கொள்ள முடியவில்லையே என்ற விரக்தியில் அவர் வெளியேறுவதாகவும் விளம்பரம் இடம்பெற்றிருக்கும்.
இந்த விளம்பரத்துக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து, இதற்காக பகிரங்க மன்னிப்பு கோரியது ஹூண்டாய் கார் நிறுவனம்.

No comments:
Post a Comment