பீகார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டம், ஜோகாட்டியா கிராமத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, 3 மாதத்திற்கு முன் ஊரைவிட்டு ஓடிவிட்டது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் 6 பேர், கடந்த 18-ம் தேதி அந்த பெண்ணின் காதலன் வீட்டுக்குச் சென்று அவனது தாயார் மற்றும் சகோதரியிடம் தகராறு செய்துள்ளனர். 'ஊரை விட்டுச் சென்ற உன் பையன் எங்கே இருக்கிறான்?' என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.
அந்த தாய் 'தனக்கு எதுவும் தெரியாது' என்று கூறியுள்ளார். இதனால் மேலும் ஆவேசம் அடைந்த அந்த கும்பல், தாய்-மகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட தாய்-மகள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment