ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைப்பது குறித்து
முடிவு எடுக்கும் அதிகாரம் காவல் துறை ஆய்வாளருக்கு இல்லை என்று சென்னை
உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது மகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, கடந்த 2008-ஆம் ஆண்டு மே மாதம் நீதீமன்றத்தில மனு தாக்கல் செய்தார்.
மனுவில், மாவட்ட ஆட்சியர் அல்லது காவல்துறை ஆணையர் உத்தரவிடாமல் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முடியாது. ஜாமீன் கேட்டபோது, அவர் மீது குண்டர் சட்டம் போடப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். எனவே மகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லாது என்று கூறியிருந்தார்.
மனுவின் முதல் கோரிக்கையின்படி அவரது மகள் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் அடைப்பது குறித்து இன்ஸ்பெக்டர் முடிவு செய்யமுடியுமா என்பது குறித்த விசாரணை, நீதிபதிகள் கே.என். பாஷா, எஸ். நாகமுத்து, எஸ். பழனிவேலு ஆகியோர் அடங்கிய முழு அமர்வுக்கு வந்தது.
இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், காவல்துறை ஆய்வாளர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது குறித்து முடிவு எடுக்க முடியாது என்று தெரிவித்தனர்.

No comments:
Post a Comment