Tuesday, 23 April 2013

தமிழக காவல்துறையில் முஸ்லிம்களுக்கு இடம் கிடைக்குமா?

காவல்துறையில் 14,243 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் : ஜெயலலிதா

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக, கட்சி மாச்சரியங்களுக்காக வழக்குகள் போடப்படுவதும், திரும்பப் பெறுவதும், முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்று வந்தன. திமுகவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் காவல் நிலையத்திற்கே சென்று, காவலர்களுக்கும், காவல் துறை அலுவலர்களுக்கும் கட்டளை இடுவது வாடிக்கையான நிகழ்வாக இருந்தது. அதனைக் கட்டுப்படுத்த அன்றைய அரசு எந்த முயற்சியையும் எடுக்காதது மட்டுமல்லாமல், அதற்கு ஆதரவும் தெரிவித்து வந்தது.

ஆனால் நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சீரழிந்திருந்த தமிழக காவல் துறையை சீர்படுத்தினேன். தற்போது தமிழகக் காவல் துறை சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்படுகிறது.  காவல் துறை செயல்பாட்டில் யாரும் தலையிட முடியாத நிலை தற்போது நிலவுகிறது. 

காவல் துறையினர் தங்கள் பணிகளை சட்டப்படியும், நியாயப்படியும் செய்து வருகின்றனர். 2010-11 ஆம் ஆண்டு 3,184 கோடியே, 48 லட்சம் ரூபாயாக இருந்த காவல் துறைக்கான நிதி ஒதுக்கீடு, 2011-12 ஆம் ஆண்டு 3,588 கோடியே 51 லட்சம் ரூபாயாகவும், 2012-13 ஆம் ஆண்டு 4,096 கோடியே 73 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில், அதாவது 2013-14 ஆம் ஆண்டு 4,706 கோடி ரூபாயாக இது அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பை செவ்வனே செய்ய காவலர்களின் எண்ணிக்கை போதிய அளவு இருக்க வேண்டும் என்பதால் காலிப் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படுகின்றன. இதுவரை 12,162 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 12,918 இரண்டாம் நிலைக் காவலர்கள், 896 உதவி ஆய்வாளர்கள், 234 தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்கள் மற்றும் 195 விரல் ரேகை பதிவு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 14,243 காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு விரைவில் அவற்றை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனஎன்றார்.

No comments:

Post a Comment