Monday, 22 April 2013

நேதாஜி ராணுவத்துடன் நடந்த யுத்தமே பிரிட்டனின் மிகப்பெரியதாக யுத்தமாக அறிவிப்பு

பிரிட்டனிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை வேண்டி காந்தியடிகள் அகிம்சை வழியில் போராடினார். அதே நேரம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டன் ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போரிட்டது.

1944-ம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானுடன் கூட்டு சேர்ந்து இந்திய தேசிய ராணுவத்தினர் பிரிட்டன் படையை எதிர்த்தனர். இந்த யுத்தம் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும், நாகலாந்து தலைநகர் கொஹிமாவிலும் நடைபெற்றது.

இதில் ஜப்பான் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தினரில் 53,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பிரிட்டன் படையை சேர்ந்த 16,500 வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், செல்சியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு பிரிட்டன் படையினர் இரண்டாம் உலகப்போரின் போது யுத்தம் செய்ததை பட்டியலிட்டனர்.

5 யுத்தங்கள் இடம் பெற்றிருந்த தேர்வில், இந்திய தேசிய ராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தமே பிரிட்டன் படையினர் போரிட்ட மிகப்பெரிய யுத்தமாக தேர்வு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment