Tuesday, 23 April 2013
கணவர் கண் எதிரே பெண் கற்பழிப்பு:
ஆந்திர மாநிலம், நளகொண்டா மாவட்டத்தை சேர்ந்த தம்பதியர் வேலை தேடி நெரட்சேர்லா என்ற பகுதியில் 3 வாரங்களுக்கு முன்னர் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
கடந்த சனிக்கிழமை மாலை மிர்யாலாகுடா சந்தைக்கு மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்ற அவர்கள் இருட்டிய பிறகு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஜன்பகாத் என்ற பகுதியருகே வந்தபோது, இயற்கை உபாதையை தீர்ப்பதற்காக வாகனத்தை நிறுத்தும்படி கணவனிடம் அந்த 35 வயது பெண் கூறினார்.
புதர் மறைவில் அவர் ஒதுங்கச் சென்றபோது, ஒரு ஆட்டோ ரிஷாவில் வந்த 3 பேர் அவளது கணவனை மிரட்டி, அடித்து, உதைத்து, அவர் கண் முன்னரே மனைவியை மாறி மாறி கற்பழித்தனர்.
ஒத்துழைக்க மறுத்த அவளை போதையில் இருந்த காமுகர்கள் அடித்து காயப்படுத்தினர். அவளது தலையில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.
கணவன்-மனைவி இருவரையும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து நெரட்சேர்லாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வாசலில் இறக்கிவிட்ட அவர்கள் மின்னல் வேகத்தில் அதே ஆட்டோவில் சென்று தலைமறைவாகி விட்டனர்.
அங்கு போதுமான சிகிச்சை வசதிகள் இல்லாததால், டாக்டர்கள் ஆம்புலன்சில் ஏற்றி மிர்யால்குடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கற்பழிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட தம்பதியரிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் அளித்த தகவலையடுத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், ஆட்டோ டிரைவர் சிப்பாயி (23) மற்றும் ஜன்பாத் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் நாகராஜு (24), பாலராஜு (22) ஆகியோரை கைது செய்து விசாரித்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment