Friday, 7 June 2013

கூடுதல் போதைக்காக மது விருந்தில் பாம்பு விஷம்:

கூடுதல் போதைக்காக மது விருந்தில் பாம்பு விஷம்: 1 3/4 லிட்டர் விஷத்துடன் 6 பேர் கைது
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, புனே போன்ற பெரு நகரங்களில் நடைபெறும் நள்ளிரவு 'போதை' விருந்து கூடுதல் போதைக்காக கருநாகத்தின் விஷம் மதுவில் கலந்து வழங்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த விருந்துகளுக்காக கருநாகத்தின் விஷத்தை 'சப்ளை' செய்யும் கும்பலை பிடிக்க மகாராஷ்டிரா போலீசார் தனிப்படை அமைத்தனர். இதனையடுத்து, லோனாவாலா அருகேயுள்ள கண்டாலா பகுதியில் ஒருவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து 1 3/4 லிட்டர் கருநாக விஷத்தை பறிமுதல் செய்தனர்.

இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி என்று கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட விஷம் 93 சதவீதம் தூய்மையானது என்றும் இது குறித்து பரிசோதனை செய்ய ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் லோனாவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணு பவார் தெரிவித்தார்.

இது தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment