ஐதராபாத்,
நாட்டின் 29–வது மாநிலமாக உதயமாகி உள்ள தெலுங்கானா மாநில சட்டசபை மற்றும் மேல்–சபை கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மன் நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர், ‘தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் நலனுக்காக அரசு ஆண்டுதோறும் ரூ.1000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யும். மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் அரசு அவர்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும். அனைத்து கிரிஜான் மலைவாழ்மக்களும் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கென தனியாக மலைவாழ் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்.
மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பிற்படுத்தப்பட்ட மக்கள் மேம்பாட்டுக்காக அரசு ரூ.25 ஆயிரம் கோடிவரை செலவிடும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்து ஏழைகளுக்கு சென்றடைவதை கண்காணிக்க ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். இந்த நலத்திட்டத்துக்காக அரசு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யும்.‘ என்றார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த பெரும்பாலான உறுதிமொழிகள் கவர்னர் உரையில் இடம்பெற்று இருந்தது
No comments:
Post a Comment