Monday, 16 September 2013

ஜேர்மனில் அதிகமாகும் நோயாளிகளின் எண்ணிக்கை



ஜேர்மனில் அதிகமான மக்கள் நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபர அறிக்கை ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
GFK நிறுவனமானது சர்வே மேற்கொண்டு தகவலை வெளியிட்டுள்ளது.
ஜேர்மனில் மேற்கு பகுதியை விட 53.4 சதவீதம் பேர் கிழக்கு பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பெர்லின் பகுதியில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 64 சதவீதம் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் இது எங்களுக்கு வருத்தமளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
வயதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. 20-29 வயதுக்குட்பட்டவர்கள் 74.1 சதவீதம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் 54.4 சதவீதம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment