Friday, 7 June 2013

மந்திரவாதியை நரபலி கொடுத்தவர்கள் கைது

 


அசாம் மாநிலத்தில் மந்திரவாதியை கொன்று நரபலி கொடுத்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

அசாம் மாநிலம், சச்சார் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் உள்ளூர் மந்திரவாதியை சிலர் நரபலிக்காக கொன்று புதைத்திருப்பதாக பன்ஸ்கண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, கலாபில் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை புதைத்த இடத்தின் அருகே சில படங்களை வைத்து சடங்குகள் செய்திருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 10 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

தலைமறைவாக இருக்கும் மேலும் சிலரை தேடி வருகின்றனர். நரபலி செய்யப்பட்ட இடத்தின் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்ட ஊர் மக்களிடம் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment